Enable Javscript for better performance
இன்று ஜிப்மர் நுழைவுத் தேர்வு: நாடு முழுவதும் 1.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    இன்று ஜிப்மர் நுழைவுத் தேர்வு: நாடு முழுவதும் 1.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 03rd June 2018 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) நடைபெறும் ஜிப்மர் நுழைவுத் தேர்வை 291 மையங்களில் 1.97 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை என இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளன. மொத்தமுள்ள 200 இடங்களுக்கான இந்த நுழைவுத் தேர்வில், 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக்கும், 50 இடங்கள் ஜிப்மர் காரைக்காலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    புதுவையில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த நுழைவுத் தேர்வை காலையில் ஒரு லட்சத்து 1,321 மாணவர்களும், மாலையில் 96 ஆயிரத்து 424 மாணவர்களும் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10 முதல் 12.30 மணி வரையும், மாலை 3 முதல் 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, 
    இ - ஆதார் அட்டை, கடவுச் சீட்டு (அசல், நகல்) ஆகிய அடையாள அட்டைகளைக் கொண்டு வரவேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை கொண்டு வரத் தவறிய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    செல்லிடப்பேசி, கால்குலேட்டர், கைக்கடிகாரம் உள்பட எந்த ஒரு மின்னணு கருவியையும் தேர்வு அறைக்குள் எடுத்து வர அனுமதியில்லை. மாற்றுத் திறனாளிகளுக்காக தரை தளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தேர்வு மையங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேர்வு முடிவுகள் ஜுன் 20-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜுலை 4-ஆம் தேதியிலிருந்து தொடங்கும். மேலும் கூடுதல் தகவல்களை என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai