Enable Javscript for better performance
துப்பாக்கிச்சூடு தொடர்பான கருத்தை ரஜினி திரும்பப் பெற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கிச்சூடு தொடர்பான கருத்தை ரஜினி திரும்பப் பெற வேண்டும்

    By DIN  |   Published on : 03rd June 2018 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்த தனது கருத்தை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
    இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
    சமூக விரோத சக்திகளால்தான் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தக் கருத்தை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் கூறினார் என்பது தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு எந்தவிதமான ஆதாரமுமின்றி ரஜினிகாந்த் பேசியிருப்பதன் மூலம் அவரை யாரோ இயக்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
    புதுவை ஆளுநர் மீது மீண்டும் குற்றச்சாட்டு: கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஊதியம் அளிக்க மட்டுமல்ல என்ற தொனியில் புதுவை துணைநிலை ஆளுநர் கருத்து தெரிவித்தார். இது அரசின் கருத்தல்ல. துணைநிலை ஆளுநரின் தனிப்பட்ட கருத்தாகும்.
    மத்திய அரசு நடத்தும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டது. தற்போது எஸ்.பி.ஐ. வங்கிக்கு ரூ. 840 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோல, மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளன. புதுவை ஆளுநரின் கருத்தை ஏற்றால், மத்திய அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சீல் வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    அரசு நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன. அவை தனியாருடன் போட்டி போட்டு லாபம் ஈட்ட முடியாது. சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பேரவைத் தலைவரின் உத்தரவை ஏற்று, புதுவையில் உள்ள அரசுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களைப் புனரமைக்க விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் 
    நாராயணசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai