Enable Javscript for better performance
மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் வேல்முருகன் மீது தமிழக அரசு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் வேல்முருகன் மீது தமிழக அரசு வழக்கு

    By DIN  |   Published on : 03rd June 2018 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் தூண்டுதலின் பேரில், தி.வேல்முருகன் மீது தமிழக அரசு தேசத் துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
    புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற தி.வேல்முருகனை, தூத்துக்குடி விமான நிலையத்தில்
    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.மத்திய அரசின் தூண்டுதலின் பேரில், தி.வேல்முருகன் மீது தமிழக அரசு தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. இதைக் கேள்விப்பட்டு அந்தக் கட்சித் தொண்டர் ஜெகன் சிங் தீக்குளித்து இறந்தார். இதுபோன்ற நேரத்தில் கட்சியினர் மனமுடைந்து போகாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும் என்றார் அவர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக, பாஜக, ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, சிலரது உüறல்களுக்கு பதில் கூற முடியாது என்றார் வைகோ. முன்னதாக, தீக்குளித்து காயமடைந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலியை வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். வேல்முருகன் கைதைக் கண்டித்து மன்சூர் அலி தீக்குளித்ததாக கூறப்பட்டாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
    காவல் துறை விளக்கம்: இதனிடையே, மன்சூர் அலி எதற்காக தீக்குளித்தார் என்று தெரியவில்லை என்றும், அவர் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai