Enable Javscript for better performance
"ஆசிரியர்கள் இன்று விடுப்பு  எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை'- Dinamani

சுடச்சுட

    

    "ஆசிரியர்கள் இன்று விடுப்பு  எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை'

    By DIN  |   Published on : 04th June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளியின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை (ஜூன் 4) ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் எச்சரிக்கை விடுத்தார்.
    காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு உடனடியாக கிடைக்கவில்லை என்றால் புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கூடுவோம்,  அதற்கு பின்னரும் கிடைக்காவிட்டால் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
     இந்த நிலையில்,  புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: 
    புதுவை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஒரே நேரத்தில் விடுப்பு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
     புதுவை மாநில 1964-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊழியர்கள் சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் தங்களது துறைத் தலைவர் அனுமதியின்றி விடுப்பு எடுத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே,  துறைத் தலைவர் அனுமதியின்றி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.    உரிய அனுமதியின்றி போராடும்போது அந்த நாள்கள் பணிவேட்டில் பணியில் இல்லாத நாள்களாக கருதப்படும்.  எனவே, துறைத் தலைவர்கள் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஜூன் 4-ஆம் தேதி முதல் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.  
     அதுபோன்று விடுப்பு எடுத்தால் அந்த நாள்களுக்குரிய ஊதியம்,  படிகளை பெற விடுப்பு எடுத்தவர்கள் தகுதியற்றவர்களாக மாறிவிடுகின்றனர்.   விடுப்பு எடுத்தவர்கள் ஊதியம்,  படிகளை  பெற விண்ணப்பிக்காமல் இருப்பதையும் துறைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.    ஜூன் 4-ஆம் தேதி பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை அறிக்கையாக தயாரித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு நண்பகல் 12 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai