Enable Javscript for better performance
ஆதிதிராவிடர்களுக்கு மனைப் பட்டா வழங்க பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க பாஜக தலித் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
     புதுவை மாநில பாஜக தலித் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் லாஸ்பேட்டையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    அணியின் மாநிலத் தலைவர் என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் ரவி (எ) அய்யனார் வரவேற்றார்.  மாநில துணைத் தலைவர்கள் எம்.கவியமூர்த்தி,  இ.கங்கை அமரன்,  ராஜேஸ்வரி,  பி.டி.ஜெயந்தரன்,  தேசிய செயற்குழு உறுப்பினர் 
    ஏ.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன்,  மாநில பொதுச்செயலர்கள் ரவிச்சந்திரன்,  தங்க.தங்கவிக்ரமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் பேசினர்.  
      தீர்மானங்கள்:   தமிழகத்தைப் போல, புதுவை மாநிலத்தில் நிலமற்ற ஆதிதிராவிட மக்களுக்காக வேண்டிய நிதி ஒதுக்கி விவசாய நிலம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உயர் கல்வி பயிலும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாட்கோ மூலம் வழங்கப்படும் கல்விக் கடனை உடனே கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
    30 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது.  எனவே,  இலவச மனைப் பட்டாவை  உடனடியாக வழங்க வேண்டும்,  தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25 சதவீத இடம் வழங்கப்படுவதை புதுவை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai