Enable Javscript for better performance
கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
      புதுவை தெற்கு மாநில திமுக இலக்கிய அணி சார்பில்  புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 
     மாநில இலக்கிய அணி அமைப்பாளர் பி.டி. பன்னீர்செல்வம்,  புரவலர் ஆளவந்தார், துணை அமைப்பாளர்கள் ஜி.என். ஸ்ரீதர்,  ஆர். கே. கலிவரதன், த. தர்மராஜ், பொருளாளர் ந. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    விழாவில், தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., கலந்துகொண்டு,  பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். 
    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, தொகுதிச் செயலாளர்கள் நடராஜன்,  சக்திவேல்,  தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம் உள்பட   நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
     இதுபோல, புதுவை திமுக வடக்கு மாநிலம் சார்பில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai