Enable Javscript for better performance
புதுச்சேரியில் குடிமைப் பணிகள் தேர்வு:  52 சதவீதம் பேர் வரவில்லை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் குடிமைப் பணிகள் தேர்வு:  52 சதவீதம் பேர் வரவில்லை

    By DIN  |   Published on : 04th June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி தேர்வை 48 சதவீதம் பேர் மட்டும் எழுதினர்.  52 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
     மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.  அதன்படி,  இந்தாண்டு குடிமைப்பணிகள்  தேர்வு நாடு முழுவதும்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் 3 மையம், லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி,  லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி,  பெத்தி செமினார் பள்ளி, பாக்கமுடையான்பட்டு இதயா மகிளிர் கல்லூரி,  உப்பளம் இமாகுலேட் மேல்நிலை பள்ளியில் 2 மையம் என மொத்தம் 9 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
     இங்கு தேர்வு எழுத 3,449 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.  காலை 9.30 முதல் 11.30 மணி வரை முதல்தாள் தேர்வு நடந்தது.  இதில் 1,678 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.  இது 48.65 சதவீதமாகும்.  தொடர்ந்து,  பிற்பகல் 2.30  மணி முதல் மாலை 4.30 மணி வரை 2-ஆம் தாள் தேர்வு நடந்தது.  இதில் 1,632 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.  இது 47.20 சதவீதமாகும்.
     தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  மேலும், தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    தேர்வை புதுவை மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் எழுதினர். தேர்வு குறித்து அவர்களிடம் கேட்டபோது,   நடப்பு நிகழ்வு பிரிவில் எண்ம இந்தியா (டிஜிட்டல் இந்தியா),  சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன.  2-ஆவது தாளில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் வந்திருந்தன. பெரும்பாலான கேள்விகள் கடினமாக இருந்தது.  அதற்கு 2 மணி நேரம் போதவில்லை என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai