Enable Javscript for better performance
புதுச்சேரி வானொலித் திடலை மீட்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி வானொலித் திடலை தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும் என்று சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
     தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த மே 4-ஆம் தேதி காலமானார்.  இந்த நிலையில்,  அவரது உருவப் படத் திறப்பு விழா புதுச்சேரி முதலியார்பேட்டை வானொலித் திடல் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 
     உலகத் தமிழர் பேரமைப்பு,  தமிழர் தேசிய முன்னணி ஆகிய அமைப்புகளின் தலைவரான பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அழகிரியின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். 
    பின்னர் அவர் பேசியதாவது:  
    தமிழ் தேசிய கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த அழகிரி வாழ்நாள் முழுவதும் தமிழ்,  தமிழ் தேச அரசியலுக்காக போராடினார்.  தனது கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாமல் கடைசி  வரை போராடினார். 
     அவர் போராடிய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது தான் அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் என்றார் பழ.நெடுமாறன்.
      தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்,  பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பிரபா.கல்விமணி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
    நிகழ்ச்சிக்கு, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமை வகித்தார்.  தமிழர் களம் செயலர் கோ.அழகர் வரவேற்றார்.  மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன்,  தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் ந.மு.தமிழ்மணி,  இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இரா.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், கடந்த பேரவைத் தேர்தலின்போது புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கொடுத்த வாக்குறுதிப்படி, பழம்பெருமை வாய்ந்த வானொலித் திடலை தனியாரிடம் இருந்து மீட்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai