Enable Javscript for better performance
பேரவைக் கூட்டத்தை 23 நாள்களாவது நடத்த வேண்டும்: அதிமுக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பேரவைக் கூட்டத்தை 23 நாள்களாவது நடத்த வேண்டும்: அதிமுக கோரிக்கை

    By DIN  |   Published on : 04th June 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைக் கூட்டத்தை குறைந்தபட்சம் 23 நாள்களாவது நடத்த வேண்டும் என்று புதுவை அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.
     இதுகுறித்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
    புதுவையில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி,   மக்களுடைய நலன் கருதி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும்.  
    புதுவை முதல்வர் மற்றும் ஆளுநரின் மோதல் போக்கால் அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது.    சட்டப்பேரவை உரிமைகள் ஆளுநரால்  பறிக்கப்பட்டுள்ளது.  இந்த அரசு பொறுப்பேற்று 24 மாதங்கள் ஆகின்றன.  7 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.  தகுதியானவர்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைகள் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
     மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற உரிய சட்டம் கொண்டு வரப்படவில்லை.  கடல் நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் மையம் அமைக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர குறைந்தது 23 நாள்களாவது பேரவைக் கூட்டத்தை  நடத்த வேண்டும்.  அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை.  நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் இலவச அரிசி வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 
     முதியோர் உதவித்தொகை கோரி தகுதியான முதியோர்கள் 14 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்தும் பணம் வழங்கவில்லை என்றார் அன்பழகன்.  பேட்டியின்போது அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன்,  எம்.எல்.ஏ.க்கள் ஆ.பாஸ்கர்,  அசனா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai