Enable Javscript for better performance
அதிகாரிகள் மீதான புகார்கள்: பேரவை புகார் குழு விசாரிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அதிகாரிகள் மீதான புகார்கள்: பேரவை புகார் குழு விசாரிக்க உத்தரவு

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் அதிகாரிகள் மீதான புகார்கள் வந்தால் பேரவை புகார் குழு அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
     புதுவை சட்டப்பேரவையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், உரிய அனுமதியுடன் மணல் எடுத்து வருபவர்களையும் வருவாய்த் துறையினர் பிடித்துக் கொள்கின்றனர். அபராதம் செலுத்தினாலும் ஒருவாரம் கழித்துத்தான் விடுவிக்கின்றனர் என்று என்னிடமும் கூட சிலர் புகார் கூறியுள்ளனர். அதிகாரிகளுக்கு இத்தகைய அதிகாரத்தை யார் தந்தது. உடனடியாக சட்டப்பேரவை புகார் குழு விசாரணை செய்ய வேண்டும்.
     நிதித்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் என யாராக இருந்தாலும் அழைத்து பேரவை புகார் குழுவில் விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்துவிட்டு அதற்கான பழியை முதல்வர் மீது போடுகின்றனர்.
     எனவே, இது தொடர்பாக சட்டப்பேரவை புகார் குழு விசாரிக்க வேண்டும் என்றார் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai