Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: பேரவையில் காரசார விவாதம்- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கு: பேரவையில் காரசார விவாதம்

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக புதுவை சட்டப்பேவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
     அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
     போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் மக்கள் பணம் திருடப்பட்ட வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருப்பதாக தகவல் உள்ளது. மக்கள் பணம் திருடு போவதை தடுக்க வேண்டும். அதிகபட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும். ஏடிஎம் கொள்ளையில் எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.
     சைபர் கிரைம், எஸ்டிஎப் போலீஸார் இணைந்து பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்தோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வழக்கில் ஒருமாதம் ஆகியும் முக்கிய எதிரிகளை கைது செய்யாதது ஏன்?.
     இதற்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளிக்கும்போது, இச்சம்பவத்தில் விஞ்ஞான ரீதியாக பணம் திருடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம், கேரளம், புதுவையில் நடைபெற்றபோதும், புதுவை போலீஸார் தான் முதலில் இதுபோன்ற நூதன திருட்டை கண்டுபிடித்துள்ளனர்.
     இவ்வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய எதிரிகளான சந்துருஜி, சத்யா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
     இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். எஸ்டிஎப், சைபர் கிரைம் போலீஸாரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
     சந்துருஜி நூற்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார். அவர் ஆந்திரம், சென்னை என பல இடங்களில் இருப்பதாக அவர் பயன்படுத்தி வரும் சிம்கார்டுகளை பயன்படுத்தி அறிய முடிகிறது.
     தலைமறைவாக உள்ளதால் 3 குழுவினர் தேடி வருகின்றனர்.
     எதிரிகளை பிடிப்பது காவல்துறையின் வேலை. எந்த தலையீட்டுக்கும் இடம் தரமாட்டோம். யார் சம்பந்தப்பட்டு மக்கள் பணத்தை சுருட்டியிருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். ஆதாரமின்றி குற்றஞ்சாட்டக்கூடாது என்றார்.
     தொடர்ந்து அன்பழகன் பேசும்போது, வங்கியில் பணம் போடும் போது வங்கி ஊழியர்கள் துணையோடு நடந்துள்ளது. வங்கி ஊழியர்களையும், அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்றார்.
     இதற்குப் பதிலளித்த முதல்வர், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai