Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பேரவையை முற்றுகையிடும் போராட்டம்: இடதுசாரிகள் அறிவிப்ப- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பேரவையை முற்றுகையிடும் போராட்டம்: இடதுசாரிகள் அறிவிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தி பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை வியாழக்கிழமை (ஜூன் 7) நடத்தப்போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
     இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
     புதுவை மாநில வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் மாபெரும் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
     சாதாரண மக்கள் உழைப்பால் சேர்த்து சேமித்து வங்கிகளில் வைத்திருந்த பணத்தை ஸ்கிம்மர் என்கிற கருவியை ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தி தகவல்களை திருடி அவரவர் சேமிப்புப் பணத்தை ஒரு கும்பல் திருடியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.400 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
     பணம் பறிகொடுத்தவர்கள் வங்கிகளிலும், காவல்துறையினரிடமும் ஏராளமான புகார்கள் கொடுத்துள்ளனர்.
     இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு சில எதிரிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் விசாரணை அதிகாரியை உள்நோக்கத்தோடு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
     எனவே, இவ்வழக்கை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
     மேலும் இச்சம்பவத்தில் சர்வதேச குற்றவாளிகளும் ஈடுபட்டுள்ளனர். எனவே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் அனைவரையும் விசாரிக்க முடியும்.
     மத்திய, மாநில அரசுகள் இந்த ஏடிஎம் கொள்ளையர்களை காலதாமதம் செய்யாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரியும் ஜூன் 7-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், ஏஐடியுசி மாநிலத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai