Enable Javscript for better performance
காவலர் மனைவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் காவலர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
     புதுச்சேரியை அடுத்த நெட்டப்பாக்கம் அருகேயுள்ள எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கயல்விழி (26). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். மணிகண்டன் தனது மனைவி, மகனுடன் சண்முகாபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கயல்விழியுடன் அவரது தாய் ராஜேஸ்வரியும் இருந்து வந்தார்.
     இதற்கிடையே, மணிகண்டனுக்கும் கயல்விழிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை இரவு மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
     இதனால் மனமுடைந்த கயல்விழி மணிகண்டன் பணிக்குச் சென்ற பிறகு விஷத் தன்மையுள்ள விதையை அரைத்து குடித்துவிட்டாராம். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்.
     இதுகுறித்து, கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai