Enable Javscript for better performance
நீட் தேர்வு: புதுவையில் 1,768 பேர் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வில் புதுவை மாநிலத்தில் 1,768 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவை சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பேசுகையில்,
     நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து சுகாதாரத் துறை எதையும் தெரிவிக்கவில்லை.
     அரசுப் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, சுகாதாரத் துறை புதுச்சேரியில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
     அதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, புதுவையில் நீட் தேர்வு எழுத 4,573 பேர் பதிவு செய்தனர். அதில் 4,462 பேர் எழுதினர். இவர்களில் 1,768 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற விவரங்களை சென்டாக் அமைப்பு வெளியிடும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai