Enable Javscript for better performance
பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

    By    புதுச்சேரி  |   Published on : 06th June 2018 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 7) முதல் சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்தார்.
     இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
     கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் (பிளஸ் 1) தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்களுக்காக ஜூலை 5 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளது.
     துணைத் தேர்வு எழுத பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
     பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்.
     வியாழக்கிழமை (ஜூன் 7) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
     தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது, தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai