Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு: நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு: நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்

    By    புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, புதுவை மின்துறை தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
     புதுச்சேரி சேதராப்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (33). இவரது மனைவி கார்த்திகா (30). இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு தினபிரசாத் (7), தனிஷ்கா (18 மாதம்) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
     புதுச்சேரி மேற்குப் பிரிவு மின்துறை இயக்குதலும், பராமரித்தலும் அலுவலகத்தில் உதவியாளராக காளிதாஸ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நெல்லித்தோப்பு பெரியார் நகரில் பழுதான மின்னூட்டியை பழுதுபார்க்கும் பணியில் காளிதாஸ் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தார்.
     அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
     அங்கு காளிதாûஸ பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, உருளையன்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பட்டாபிராமன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பணியின்போது இறந்த மின்துறை ஊழியர் காளிதாஸ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
     இருப்பினும், அதை ஏற்க மறுத்த மின்துறை தொமுச தொழில்சங்கத்தினர் தலைவர் மதிவாணன் தலைமையில், காளிதாஸின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மின்துறை தலைமை அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர். தாய், தந்தையை இழந்து தவிக்கும் 2 குழந்தைகளில் நிலைமையை அரசு கவனத்தில் கொண்டு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
     இதையடுத்து அங்கு வந்த மின்துறை அதிகாரிகள், ஒதியஞ்சாலை போலீஸார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai