Enable Javscript for better performance
வரலாற்றுப் பேரவை சார்பில் நூல்கள் அறிமுக விழா- Dinamani

சுடச்சுட

    

    வரலாற்றுப் பேரவை சார்பில் நூல்கள் அறிமுக விழா

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி வரலாற்றுப் பேரவை சார்பில், விழுப்புரம் கோ.செங்குட்டுவனின் வரலாற்றுப் பதிவுகள் நூல்கள் அறிமுகக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
     புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சின்ன சேகர் வரவேற்றார். பேராசிரியர் இளங்கோ தலைமை வகித்தார்.
     கவிஞர் பழமலய், வீர.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பழைய பேப்பர் எனும் நூலை மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவர் சுகுமாரனும், வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் எனும் நூலை பொறியாளர் ராதேவும், சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றத் தேடல் எனும் நூலை விசாகனும் வெளியிட்டனர். நூலாசிரியர் செங்குட்டுவன் ஏற்புரை ஆற்றினார். விழாவில் ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai