Enable Javscript for better performance
அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

    By  புதுச்சேரி  |   Published on : 07th June 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல்கள் உடைத்து பணம் திருடப்பட்டது.
     புதுச்சேரி முதலியார்பேட்டை முருகங்கப்பாக்கத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மாதம்தோறும் அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.
     இந்த நிலையில், கோயில் குருக்கள் செவ்வாய்க்கிழமை காலை அவர் வழக்கம் போல கோயிலை திறக்க வந்தார். அப் போது அங்கிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
     போலீஸார் நடத்திய விசாரணையில், இதுபோன்று அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயில், முருங்கப்பாக்கம் பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
     இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai