Enable Javscript for better performance
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை 8-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை 8-இல் தொடக்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை யூனியன் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஜூன் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
     புதுவை யூனியன் இளைஞர் காங்கிரஸýக்கு கடைசியாக கடந்த 2012-இல் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     அதன் பிறகு தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்படவில்லை.
     தேர்தலை நடத்தக் கோரி பல்வேறு நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
     இதனை ஏற்று அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கடந்த ஆண்டு டிச.11-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்குவது என்று முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
     அதில் வயது வரம்பு 1.1.1982 முதல் 31.12.2017 வரை உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேரலாம் என்ற விதிமுறை கூறப்பட்டுள்ளது.
     இதையடுத்து உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா ஜூன் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
     இதில், முதல்வர் வே.நாராயணசாமி, கட்சியின் பிரதேச கமிட்டித் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சீனிவாஸ், செயலாளர் ஜெபி மேத்தர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai