Enable Javscript for better performance
ஒலிம்பியாட் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பியாட் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒலிம்பியாட் என்னும் சர்வதேச தனித்திறன் போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
     மாணவர்களிடம் உள்ள திறமை மற்றும் செயல் திறனை அடையாளம் காணவும், அவர்களை பள்ளிக்கு அப்பாற்பட்டு நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தயார் செய்யும் நோக்கிலும் (எஸ்.ஓ.எப்.) அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
     இதற்காக தேசிய சைபர் ஒலிம்பியாட், தேசிய அறிவியல் ஒலிம்பியாட், சர்வதேச கணித ஒலிம்பியாட், சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட், சர்வதேச பொது அறிவு ஒலிம்பியாட், சர்வதேச கம்பெனி செயலகங்கள் ஒலிம்பியாட் என 6 போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
     பள்ளிகள், நகரங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டிகளை நடத்தி வெகுமதி அளித்து ஊக்குவித்தும் வருகிறது.
     2017-18-ஆம் ஆண்டுக்கான போட்டி 30 நாடுகளில் ஆயிரத்து 400 நகரங்களில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றது. இதில் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
     புதுச்சேரியில் இருந்து 19 ஆயிரத்து 577 பேர் பங்கேற்றனர். இவர்களில் புதுச்சேரி புளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கில மற்றும் கணித ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai