Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் ஒத்துழைப்பு தருவதில்லை: முதல்வர் வேதனை- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் ஒத்துழைப்பு தருவதில்லை: முதல்வர் வேதனை

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
     புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் செவ்வாய்க்கிழமை மாலை நடத்தின.
     இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
     தற்போதைய காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பாதுகாப்பையும், சுற்றுலா மேம்பாட்டையும் முக்கிய கொள்கையை முதலில் செயல்படுத்தப்பட்டது. முக்கியமாக சட்டம்-ஒழுங்கை சரிசெய்து, சுற்றுச்சூழலை சீர்படுத்தியதால்தான் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசுடன் மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
     தில்லி, ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் சுற்றுச்சூழலை காக்க தவறியதால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த நிலை புதுவைக்கு வந்துவிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றார் முதல்வர். பின்னர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கினார். விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இயக்குநர் ஸ்மிதா உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai