Enable Javscript for better performance
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, புதுச்சேரியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     பிளஸ் 2 தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டடார்.
     மாணவியின் இறப்புக்கு காரணமான நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனக் கோரி, புதுவை தெற்கு மாநில திமுக மாணவர் அணி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
     மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
     ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் வேலன், தொகுதிச் செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், சீத்தாராமன், கலியகார்த்திகேயன், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனூஸ், மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai