புதுப்பிக்கப்பட்ட இரும்புக் கூண்டுகள், வனத் துறையிடம் ஒப்படைப்பு
By புதுச்சேரி, | Published on : 07th June 2018 09:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரி நகர வீதிகளிகளில் மரங்களில் இருந்து அகற்றப்பட்ட இரும்புக் கூண்டுகளை தனியார் தொண்டு நிறுவனம் புதுப்பித்து வனத்துறையிடம் ஒப்படைத்தது.
மரங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த இரும்புக் கூண்டுகளை அகற்றும் பணியை புதுச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது.
தெரு வீதிகளில் வளர்ந்த மரங்களில் இருக்கும் இரும்புக் கூண்டுகளை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்த அமைப்பு அகற்றி வருகிறது.
இவ்வாறு அகற்றப்பட்ட கூண்டுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து, வண்ணம் பூசி - சுற்றுச்சூழல் தினமான செவ்வாய்க்கிழமை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. புதுவை அரசு வனக்காப்பாளர் எ.குமார், துணை இயக்குநர் ந.குமாரவேலு, வனத்துறை வேளாண் அலுவலர் தியாகராஜன் ஆகியோரிடம் புதுப்பிக்கப்பட்ட கூண்டுகளை, புதுச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் வெள்ளையன், கந்தசாமி பாபு, மணிமாறன், பூபதி ஆகியோர் ஒப்படைத்தனர்.
முதல்கட்டமாக 61 இரும்புக் கூண்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு உறுதுணையாக இருந்த, சண்முகன் அறக்கட்டளை நிறுவனர் சமூகன் சரவணன், தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் பூரணாங்குப்பம் ஆனந்தன், புதுவை அறிவியல் இயக்க செயலர் அருண் நாகலிங்கம், வெற்றிச்செல்வம், அன்ன பிரதோஷனா அறக்கட்டளை நிறுவனர் பிரவின் ஆகியோரும் பங்கேற்றனர்.