Enable Javscript for better performance
புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஓரிரு நாளில் மத்திய அரசு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஓரிரு நாளில் மத்திய அரசு அனுமதி

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஓரிரு நாள்களில் மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிடும் என்று புதுவை முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து அந்த அலுவலகம் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுவை அரசின் 2018-19-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு மத்திய உள்துறையின் இறுதிகட்ட அனுமதி கிடைக்காததால் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, புதுதில்லிக்கு புதன்கிழமை சென்று மத்திய உள்துறையின் யூனியன் பிரதேசங்களுக்கான இணைச் செயலர் கோவிந்த் மோகனை சந்தித்துப் பேசினார்.
     நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்க அப்போது முதல்வர் வலியுறுத்தினார்.
     மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 5.6.2018-ஆம் தேதியிட்ட கடிதத்தில் கேட்கப்பட்ட விவரங்களை புதுவை அரசு 5.6.2018-இல் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளதை நாராயணசாமி சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க எத்தகைய விவரங்கள் கொடுக்கப்பட்டதோ அதுபோலவே இந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது என்றும், எனவே, கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
     இதை உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், ஓரிரு நாள்களில் நிதிநிலை அறிக்கைக்கான ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai