Enable Javscript for better performance
புதுவை முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள்

    By  புதுச்சேரி  |   Published on : 07th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் முதல்வருமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
     இதையொட்டி, புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் மறைமலையடிகள் சாலை- கடலூர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அவரது மகனும், பேரவைத் தலைவருமான வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     மேலும், முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி.ஆறுமுகம், ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் செயலாளர் சாம்ராஜ், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
     முன்னதாக, வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் பிரதேச கமிட்டி தலைமை அலுவலகத்தில் வெங்கடசுப்பா ரெட்டியார் உருவப்படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் எம்டிஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai