Enable Javscript for better performance
மணல் திருட்டுக்கு அமைச்சர்கள் ஆதரவு அளிப்பது தவறான செயல்: அதிமுக பேரவைக் குழுத் தலைவர்- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருட்டுக்கு அமைச்சர்கள் ஆதரவு அளிப்பது தவறான செயல்: அதிமுக பேரவைக் குழுத் தலைவர்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டவிரோத மணல் திருட்டுக்கு அமைச்சர்கள் ஆதரவு அளிப்பது தவறான செயல் என்று அதிமுக பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
     இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
     புதுவையில் கட்டடத் தொழிலுக்கு மணல் தேவை. அதை சட்ட ரீதியாக பெற ஆளும் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகளையே தவறு செய்தவர்களாக குறிப்பிட்டு அமைச்சர்களே விமர்சனம் செய்கின்றனர். இதன் மூலம் சட்ட விரோதச் செயலுக்கு அமைச்சர்களே துணை போவது தவறான செயல்.
     1957-ஆம் ஆண்டு சுரங்க சட்டப்படி அனுமதியின்றி மணலை எடுத்துச் செல்வதும், சேமித்து வைப்பதும் கூடாது. அதேபோல, 1979 புதுவை யூனியன் பிரதேச சுரங்க சட்டம் மற்றும் விதிகள்படி அனுமதியின்றி மணல் எந்த வண்டியில் எடுத்துச் சென்றாலும் பறிமுதல் செய்யலாம். 2 முறை மணல் கடத்தும் வாகனத்தை பறிமுதல் செய்யலாம், மூன்றாவது முறை அதே வாகனம் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
     தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மணலை கொண்டுவர அங்குள்ள முதல்வருடன், புதுவை முதல்வர் உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
     தமிழக அரசை நல்லுணர்வோடு அணுகினால் மணல் தட்டுப்பாட்டை போக்க வாய்ப்பு உள்ளது. மணல் தேவையை நிறைவு செய்வது அரசின் கடமை. ஆறுகளில் மணல் எடுக்க அரசே அனுமதி தரலாம் அல்லது கார்ப்ரேஷன் அமைத்து தமிழகத்தில் இருந்து மணலை வாங்கி விற்பனை செய்யலாம்.
     வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யப் போவதாக முதல்வர் கூறியுள்ளார். அதற்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளாரா?
     துறைமுக செயல்பாட்டுக்கே ஒப்புதல் தராத ஆளுநர், மணல் இறக்குமதி செய்ய ஒப்புதல் தருவாரா? ஆளுநரின் அனுமதியின்றி மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியுமா? என்றார் அன்பழகன்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai