Enable Javscript for better performance
அழகுக் கலை நிபுணரிடம் 8 பவுன் நகைகள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    வீடு புகுந்து அழகுக் கலை நிபுணரிடம் கத்தி முனையில் 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     புதுச்சேரி முதலியார்பேட்டை தீரன் சத்தியமூர்த்தி நகரில் வசிப்பவர் சித்ரா (42). இவர், கணவர் உலகநாதனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மற்றொரு மகன் மன வளர்ச்சி குன்றியவர் என்பதால், தாயுடன் இருந்து வருகிறார்.
     கணவரை பிரிந்த சித்ரா அழகுக் கலை நிபுணர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு 4 பேர் திருமண அலங்காரத்துக்கு முன்பதிவு செய்வதாகக் கூறி வந்தனராம்.
     பின்னர், சித்ராவை கத்தி முனையில் மிரட்டிய அவர்கள் அவர் அணிந்திருந்த தாலிச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
     இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை சித்ரா புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் பாபுஜி, காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai