Enable Javscript for better performance
எம்.பில். முழுநேரப் படிப்புக்கு ஜூலை 4-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    எம்.பில். முழுநேரப் படிப்புக்கு ஜூலை 4-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., முழுநேரப் படிப்புக்கு வருகிற ஜூலை 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பக்தவத்சல பாரதி தெரிவித்தார்.
    இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) முழு நேரப் படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    இலக்கியம், மானிடவியல், மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல், இளநிலை, முதுநிலை மதிப்பெண்கள் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு படிகளை சான்றளித்து இணைத்து அனுப்ப வேண்டும்.
    மேலும் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு ரூ. 300-க்கான வரைவோலை இணைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் சாதிச் சான்றிதழை இணைத்து ரூ. 150-க்கான வரைவோலை எடுத்து அனுப்பினால் போதுமானது.
    மேற்கூறிய அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பங்களைக் வருகிற 4.7.2018 மாலை 5 மணிக்குள் இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாசுப்பேட்டை, புதுச்சேரி-8 என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும். 
    இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0413 - 2255817, 2255827 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் pilc.py@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விவரங்களைக் கேட்டு அறியலாம்.
    இந்த நிறுவனத்தில் மானிடவியல், மொழியியல், சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல் தொடர்பான சான்றிதழ், பட்டய வகுப்புகளும் மாலை நேரத்தில் நடைபெற உள்ளன. அடிப்படைத் தமிழ் படிக்க விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai