Enable Javscript for better performance
கார் கண்ணாடியை உடைத்து மடிக் கணினி திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கார் கண்ணாடியை உடைத்து மடிக் கணினி திருட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் வங்கி மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து மடிக் கணினியை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     சென்னை கோடம்பாக்கம் ரத்னம் வீதியைச் சேர்ந்தவர் ஆசிஷ் அரவிந்த் (38). தனியார் வங்கி மேலாளரான இவர், தனது வங்கிக் கிளையின் ஆய்வுப் பணிக்காக புதுச்சேரிக்கு புதன்கிழமை காலை வந்திருந்தார். அன்று மாலை துமாஸ் வீதி பழைய நீதிமன்றம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, கடற்கரைக்குச் சென்றார்.
     சிறிது நேரம் கழித்து வந்த போது, அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த மடிக் கணினி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
     இதுகுறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் ஆசிஷ் அரவிந்த் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மடிக் கணினியைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai