Enable Javscript for better performance
குடியரசுத் தலைவருக்கு அவமரியாதை: கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவருக்கு அவமரியாதை: கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழையவிடாமல் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக நல அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார்.
     அப்போது, அவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் சிலர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோயில் படிக்கட்டில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினார் என்று கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுவை மாநில திராவிடர் கழகம் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக் குழு உறுப்பினர் முருகன், லோக் ஜனசக்தி அமைப்பாளர் புரட்சிவேந்தன், தமிழர் களம் ஒருங்கிணைப்பாளர் அழகர், மனித நேய மக்கள் இயக்கத் தலைவர் பஷீர், மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி செழியன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் நிர்வாகி தீனா உள்பட பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai