Enable Javscript for better performance
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி புதுவை மாநில இறகுப் பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி புதுவை மாநில இறகுப் பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல்

    By  புதுச்சேரி  |   Published on : 08th June 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, புதுவை மாநில இறகுப் பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல் புதுச்சேரியில் வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்றது.
     புதுவை மாநில இறகுப் பந்து சங்கத்தில் முன்பு இருந்த நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே தேசிய போட்டிகளில் பங்கேற்க அனுப்புவதாக புகார் எழுந்தது.
     இதனால், பாதிக்கப்பட்டவர்கள் புதுவை முதல்வர், கல்வித் துறை அமைச்சரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
     மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கும் தொடுத்தனர்.
     இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் புதுவை மாநில இறகுப் பந்து சங்கத்துக்கு இடைக் கால நிர்வாக அதிகாரியாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதுவை மையப் பொறுப்பாளரான முத்துவை நியமித்தது. மேலும், சங்கத்துக்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரியாகவும் அவரை நியமித்தது.
     இதன் தொடர்ச்சியாக கடந்த 30.4.2018 அன்று சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு உறுப்பினராக இருந்தவர்கள் வாக்களிக்க ஜூன் 4-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது 2012-க்குப் பின்னர் உறுப்பினர்களாகப் பதிவு செய்தவர்கள் தாங்களும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
     இதையடுத்து 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ள 106 பேர் வாக்களிப்பதற்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதில் தலைவர் பதவிக்கு ரமேஷ், ஜெகதீசன் ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு அனதராஸ், மதிவாணன், ù சல்வநாதன், கலியமூர்த்தி, சீனுவாசன், செந்தில்குமார் ஆகிய 6 பேரும், செயலர் பதவிக்கு ஜெயசங்கர், விஸ்வநாத் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு மாணிக்கராஜ், சிவராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
     வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்குப் பெட்டிகள் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.
     நீதிமன்றமே வாக்குகளை எண்ணி, முடிவுகளை அறிவிக்க உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai