Enable Javscript for better performance
ஜிப்மர் இயக்குநராக விவேகானந்தம் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் இயக்குநராக விவேகானந்தம் பொறுப்பேற்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநராக (பொ) கதிர்வீச்சு சிகிச்சை துறையின் முன்னாள் தலைவர், ஜிப்மர் தேர்வு பிரிவின் பேராசிரியர் விவேகானந்தம் (படம்) கடந்த மே 31-ஆம் தேதி பொறுப்பேற்றார்.
     மருத்துவர் விவேகானந்தம் பேராசிரியர் பணி, மருத்துவர் பணி மட்டுமன்றி புற்றுநோய் ஆராய்ச்சியில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். கதிர்வீச்சு சிகிச்சை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், பல்வேறு தேசிய, சர்வதேச பத்திரிகைகளில் 70-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். கடந்த 2008-இல் ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றதில் இருந்து ஜிப்மர் மருத்துவத் தேர்வு பிரிவின் பேராசிரியராக தன் பங்களிப்பை அளித்து வருகிறார். மேலும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பொறுப்பையும் வகித்துள்ளார். மருத்துவர் விவேகானந்தன் ஜிப்மர் தேர்வுகள், கல்வி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஜிப்மர் வளாகத்தின் எண்மயமாக்கம் (டிஜிட்டலாக்கம்) தொடங்குவதற்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai