Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

    By புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரங்கநாதன் தெரிவித்தார்.
    இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வகளும், (முதன் முறையாக அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வெழுத இருப்பவர்கள்/ஏற்கெனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அதற்கான செய்முறை பயிற்சி வகுப்புக்குப் பெயர் பதிவு செய்திராத தனித் தேர்வர்களும்) அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
    எனவே, அனைத்து தனித் தேர்வர்களும் அதற்கான விண்ணப்பங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களை இரண்டு நகல்களில் நிறைவு செய்து, விண்ணப்பம், தேர்வு கட்டணம் (ரூ. 125) ஆகியவற்றை முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
    செய்முறை தேர்வுகளில் கலந்து கொண்ட தேர்வர்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai