Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: ஜூன் 11, 12-இல் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: ஜூன் 11, 12-இல் விண்ணப்பிக்கலாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரங்கநாதன் தெரிவித்தார்.
     இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு எழுத இந்த அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
     அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ தேர்வெழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
     சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலக தேர்வுப் பிரிவில் வருகிற ஜூன் 11, 12-ஆம் ஆகிய தேதிகளில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 2018 மார்ச்சில் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகல், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ஆகியவற்றை விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
     தேர்வு கட்டணமாக ரூ. 125, சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 500 என மொத்தம் ரூ. 625 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகவே செலுத்தலாம். தத்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு கடலூரில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
     தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai