Enable Javscript for better performance
பள்ளிக் கல்வி இணை, துணை இயக்குநர் பதவி: பள்ளி முதல்வர்கள் இருவரிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிக் கல்வி இணை, துணை இயக்குநர் பதவி: பள்ளி முதல்வர்கள் இருவரிடம் ஒப்படைப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வி இணை, துணை இயக்குநர் பதவிகள் அரசுப் பள்ளி முதல்வர்கள் இருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டன.
     புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குநராக குமார் பொறுப்பு வகித்து வருகிறார். அதன் இணை இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் (பெண் கல்வி) பொறுப்பு வகித்து வந்த சோமசுந்தரம் கடந்த மே 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனால், இரு உயர் பதவிகளும் காலியாக இருந்தன.
     அதேபோல, துணை இயக்குநராக (தொடக்கக் கல்வி) பொறுப்பு வகித்து வந்த மூர்த்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார். தற்போது, துணை இயக்குநர் (மதிய உணவு) கலைச்செல்வன் தொடக்கக் கல்விப் பிரிவைக் கூடுதலாக கவனித்து வருகிறார்.
     மேலும், தேர்வு பிரிவு அதிகாரி பதவியும் காலியாக உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், இணை இயக்குநர் உள்பட முக்கியமான 4 பதவிகள் காலியாக இருப்பதால், கல்வித் துறையின் பணிகள் தேக்கமடைந்தன.
     இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிவேலுக்கு கூடுதலாக துணை இயக்குநர் (பெண் கல்வி) பொறுப்பு வழங்கப்பட்டது.
     இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வி இணை, துணை இயக்குநர் பதவிகள் 2 அரசுப் பள்ளி முதல்வர்களுக்குக் கூடுதலாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
     இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) ஏழுமலை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுவை பள்ளிக் கல்வி துணை இயக்குநர் (தொடக்கக் கல்வி) பொறுப்பு புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மைக்கேல் பெனோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பொறுப்பு விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் குப்புசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai