புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
By புதுச்சேரி, | Published on : 08th June 2018 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கிய "காலா' திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. அந்த வகையில் புதுச்சேரியிலும் காலா திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள 15 திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து, அந்தத் திரையரங்கங்கள் முன் ரசிகர்கள் கட் அவுட், பதாகைகளை வைத்து, அலங்காரம் செய்து, திரைப்படம் வெளியான சமயத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக் குரலால் நகர்ப்புறத்தில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் மட்டும் நடைபெறவில்லை. மற்றபடி, அனைத்துத் திரையரங்குகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.