Enable Javscript for better performance
மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மின் கம்பியில் சிக்கி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மின் கம்பியில் சிக்கி சாவு

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாடியில் இருந்து தவறி விழுந்த ஒடிஸா மாநில இளைஞர் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.
     ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிதாம்பர் நாயக் (24). இவர், கடந்த 6 மாதங்களாக வில்லியனூர் அருகே உறுவையாறில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிதாம்பர் நாயக் 5 பேருடன் அந்தப் பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட வீட்டில் வாடகை எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.
     இந்த நிலையில், பிதாம்பர் நாயக்குடன் தங்கியிருந்த நண்பர் ஒருவருக்கு புதன்கிழமை பிறந்த நாள் என்பதால், அவர் இரவு விருந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
     அப்போது அதிக அளவில் மது அருந்திய பிதாம்பர் நாயக் மது போதையில் மாடியில் உள்ள கழிப்பறைக்குச் சென்றாராம். அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்ததில், அருகே சென்ற மின் கம்பியில் பிதாம்பர் நாயக் சிக்கி கொண்டார்.
     இதனால், மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிதாம்பர் நாயக் உயிரிழந்தார்.
     இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai