Enable Javscript for better performance
அழகுக் கலை நிபுணரிடம் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அழகுக் கலை நிபுணரிடம் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அழகுக் கலை நிபுணரிடம் கத்தி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
     புதுச்சேரி முதலியார்பேட்டை தீரன் சத்தியமூர்த்த நகர், வாரியார் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா ( 42). வீட்டிலேயே அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த மே 30-ஆம் தேதி காலை சித்ரா வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி சித்ரா அணிந்திருந்த கம்மல், வளையல் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகள், 4 செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர்.
     இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் பாபுஜி, காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
     அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் யாராவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சித்ராவின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த எண்களைத் தொடர்பு கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் புதுவையைச் சேர்ந்த வட்டிக் கடைக்காரர் ஜியோதர் எட்வின் சிக்கினார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது நண்பர்கள் வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் (கொலை வழக்கு குற்றவாளி), செüத்ரி, லோகேஷ், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
     இதையடுத்து சந்தோஷ், செüத்ரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள், 2 செல்லிடப்பேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
     மேலும், தலைமறைவாக உள்ள லோகேஷ் , பெருமாள் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai