Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் உள்ளாட்சித் துறை அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். நகர்ப்புற அடிப்படை சேவைகளுக்கு கட்டணம் கோரும் புதுச்சேரி பொலிவுறு நகரம் திட்டத்தை முழுவதுமாகக் கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு 14 அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி வழங்க வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     உள்ளாட்சித் துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் கிளைச் செயலர்கள் நந்தகுமார், மாயவன், ஆறுமுகம், சாமிநாதன், கமலக்கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயலர் பாலசுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் பழனி, நகரக் குழுச் செயலர் புருஷோத்தமன் ஆகியோர் உரையாற்றினர். 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai