Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற தவறிய அதிகாரிகளை பேரவைக்கு அழைத்து கண்டிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற தவறிய அதிகாரிகளை பேரவைக்கு அழைத்து கண்டிக்க வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதிநிலை அறிக்கைக்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து உரிய காலத்தில் பெறத் தவறிய புதுவை அரசின் தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகியோரை பேரவைக்கு அழைத்து கண்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வலியுறுத்தியது.
     இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல் புதுவை சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுவை வரலாற்றில் இப்படிப்பட்ட நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை. இதற்கு பாஜக - காங்கிரஸ் அரசுகளே காரணம்.
     கடந்த 7 ஆண்டுகளாக இடைக் கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியிலும் இடைக் கால நிதிநிலை அறிக்கையைத்
     தாக்கல் செய்து மக்களை ஏமாற்றினர்.
     மாநில காங்கிரஸ் அரசு அதிகாரிகளையும், தலைமைச் செயலர், நிதிச் செயலர் ஆகியோரை வேலை வாங்காமல் சட்டப்படி வரவேண்டிய நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற வேண்டி முதல்வரே தில்லிக்குச் சென்றார்.
     ஜூன் 15-ஆம் தேதிக்குள் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாவிட்டால், அரசியல் சட்ட நெருக்கடி ஏற்படும் என்று தெரிந்தும் காங்கிரஸ் அரசைப் பழிவாங்கும் வகையில், மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவையில் அனுமதிக்காததை மனதில் கொண்டு புதுவையை வஞ்சித்து வருகிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும். நிதிநிலை அறிக்கைக்கான அனுமதியை பெறத் தவறிய தலைமைச் செயலர், நிதிச் செயலரை பேரவைக்கு அழைத்து கண்டிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai