Enable Javscript for better performance
நிலத்தடி நீரின் மாற்றங்கள் குறித்து புதுவை பல்கலை.யில் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தடி நீரின் மாற்றங்கள் குறித்து புதுவை பல்கலை.யில் பயிலரங்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலத்தடி நீரின் மாற்றங்கள் தொடர்பாக புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த பயிலரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
     இந்திய - அமெரிக்க தொழில்நுட்ப அமைப்பு, புதுவை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து "நிலத்தடி நீரின் மாற்றமும், எதிர்கால பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களும்' என்ற தலைப்பிலான பயிலரங்கை செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடத்தியது.
     இந்தப் பயிலரங்கில் அமெரிக்க பல்கலை., இந்திய பல்கலைக்கழகங்களின் நிலத்தடி நீர் நிபுணர்கள், பேராசிரியர்கள், மூத்த ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
     புவி அமைப்புத் துறைத் தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். இயற்பியல், வேதியல், பயன்பட்டு அறிவியல் பள்ளிகளின் புல முதன்மையர் பாலகிருஷ்ணண் முன்னிலை வகித்தார்.
     அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகப் புவி அமைப்பியல் துறை நிலத்தடி நிபுணர் ஸுகதாதத்தா பயிலரங்கம் குறித்து நோக்கவுரையாற்றினார்.
     புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் சிறப்புரையாற்றினார்.
     புதுவை அரசின் வளர்ச்சி ஆணையர் - செயலர் அன்பரசு பேசினார். பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai