Enable Javscript for better performance
நிலுவை வரித் தொகை செலுத்தாத வணிக நிறுவனங்களின் சொத்துகள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை வரித் தொகை செலுத்தாத வணிக நிறுவனங்களின் சொத்துகள் ஏலம்

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலுவை வரித் தொகை செலுத்தாத வணிக நிறுவனங்களின் சொத்துகள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டன.
     இதுகுறித்து புதுச்சேரி வணிக வரித் துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுவை யூனியன் பிரதேசம், மாஹே பிராந்தியத்தில் நிலுவை வரித் தொகை செலுத்தாத 3 வணிகர்களின் சொத்துகள் கண்டறியப்பட்டு, அரசு வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர்களது சொத்துகள் மின்னணு மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் நிலுவை வரித் தொகை செலுத்தாத வணிகர்களிடமிருந்து வரி, அபராதத் தொகையாக ரூ. 68 லட்சத்தை வணிக வரித் துறையினர் வசூல் செய்தனர். நிலுவை வரித் தொகை செலுத்தாதவர்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என வணிக வரித் துறையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai