Enable Javscript for better performance
பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
     புதுச்சேரி தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 5.12.2017-இல் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த அலுவலகக் கண்காணிப்பாளர் சிவபாரதி, பல்நோக்குப் பணியாளர் ஐயனார் ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
     அதன்படி, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பணிக்கான ஆணைகளை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். நிகழ்ச்சியின் போது, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், கல்வியமைச்சர் இரா.கமலக்கண்ணன், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., கல்வித் துறைச் செயலர் அன்பரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai