Enable Javscript for better performance
விதி மீறும் வாகனங்களை கண்காணிக்க பறக்கும் கேமரா- Dinamani

சுடச்சுட

    

    விதி மீறும் வாகனங்களை கண்காணிக்க பறக்கும் கேமரா

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு பறக்கும் கேமரா உதவியுடன் அபராதம் விதிக்கும் முறைக்கான வெள்ளோட்ட நிகழ்ச்சியை போக்குவரத்து போலீஸார் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
     புதுச்சேரி நகர் பகுதிகளில் முக்கிய வீதிகளான நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
     வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லக் கூடிய நிலை உள்ளது. இந்த நிலையில், முக்கிய வீதிகள், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை போக்குவரத்து போலீஸார் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக பறக்கும் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
     இதற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நேரு வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களைப் பறக்கும் கேமரா மூலம் போக்குவரத்து போலீஸார் கண்காணித்தனர்.
     பறக்கும் கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் அந்த வாகனங்களின் எண்களைக் கண்டறிந்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பறக்கும் கேமரா சுமார் 70 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த கேமராவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். உயரமாகவும், தாழ்வாகவும், பக்கவாட்டிலும் எப்படி வேண்டுமானாலும் இயக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இன்னும் சில நாள்களுக்குத் தொடர்ந்து வெள்ளோட்டம் பார்க்க இருப்பதாகவும், பின்னர் இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai