Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கலையரங்கம்: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கலையரங்கம்: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

    By DIN  |   Published on : 10th June 2018 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சொசியத்தே உயர்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கலையரங்கை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) திறந்து வைக்கிறார்.
    பைரவி கர்நாடக சங்கீத சபா தலைவர், மூத்த பத்திரிகையாளர் துரைசாமி ரூ. 7 லட்சம் செலவில் தனது மனைவி லட்சுமி துரைசாமி நினைவாக புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள சொசியத்தே உயர்நிலைப் பள்ளியில் கலையரங்கம் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கலையரங்குக்கு வீணைக் கலைஞர் லட்சுமி துரைசாமி கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
    நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் தலைமை வகிக்கிறார். மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலையரங்கைத் திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் அல்லம் ஸ்ரீ துருகபிரசாத் சித்திரா வீணை, ஸ்ரீ வி.வி.சீனுவாசராவ் வயலின், நெய்வேலி ஸ்கந்த் சுப்ரமணியம் மிருதங்கம் வாசிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துரைசாமி செய்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai