சுடச்சுட

  

  அரியாங்குப்பத்தில் 3 கோயில் உண்டியல்களில் பணம் திருட்டு

  By DIN  |   Published on : 10th June 2018 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் 3 கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
  புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அருகே பூரணாங்குப்பம் வீதியில் செடிலாடும் செங்கழு நீரம்மன் கோயில், திரெளபதி அம்மன் கோயில் ஆகியவை உள்ளன. மேலும், திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் பார்த்தசாரதி கோயிலும் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். அந்த காணிக்கைப் பணம் எடுக்கப்படாமல் இருந்தது.
  இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோயில்களுக்கு வந்த பக்தர்கள் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். இதுபற்றி அறிந்த கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் அங்கு வந்து பார்த்தனர். இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரங்கநாதன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடிய கும்பல் அருகே உள்ள மின்துறை அலுவலகத்தின் கதவை உடைத்து, மின் கட்டணம் வசூலித்து வைக்கப்படும் பணப் பெட்டியை உடைத்துள்ளனர். அதில், பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முருங்கப்பாக்கத்தில் அங்காளம்மன் கோயில் உள்பட 3 கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய கும்பல்தான் இந்த திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார்
  விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai