Enable Javscript for better performance
ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நாராயணன். இவரது மகன் அக்ஷய்தேவ் (28). பெண்ணாகப் பிறந்த இவர், ஆண் தன்மை அதிகம் இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் ஆணாக தன்னை மாற்றிக் கொண்டார்.
    இவர், கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையாகுப்பத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் இளவரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    இந்த நிலையில், இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சேர்ந்து வாழவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அக்ஷய் தேவ் அழகு நிலையம் சென்று, மனைவி இளவரசியை சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அவர் மறுத்ததால், மனம் உடைத்த அக்ஷய தேவ் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
    உடல் முழுவதும் எரிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai