குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
By DIN | Published on : 10th June 2018 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, திமுக எம்.எல்.ஏ. இரா.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டத்தைத் தொடக்கிவைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு மூலம் மாணவர்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இளம் வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வரும் ஏழை, எளிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மன உறுதியை ஏற்படுத்த அரசுடன் சமூக அமைப்புகள் இணைந்து மாணவர்கள் உயிர் இழப்பைத் தடுக்க பாடுபட வேண்டும் என்றார் அவர்.
மாரத்தான் ஓட்டத்தின் முடிவில், அனைவரும் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், வேலையில் ஈடுபடுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.