Enable Javscript for better performance
ஜிப்மர் செவிலியர் அதிகாரி, எல்டிசி பணிக்கு இன்று இணையதளம் மூலம் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் செவிலியர் அதிகாரி, எல்டிசி பணிக்கு இன்று இணையதளம் மூலம் தேர்வு

    By DIN  |   Published on : 10th June 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிப்மரில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள், எல்டிசி பணியிடங்களை நிரப்புவதற்கான இணையதள (ஆன்லைன்) தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
    நாடு முழுவதும் 59 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 91 செவிலியர் அதிகாரி பணியிடங்கள், 24 எல்டிசி பணியிடங்கள் என மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடு முழுவதும் 59 மையங்களில் தேர்வு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெறுகிறது. செவிலியர் அதிகாரி பதவிக்கு 14,995 பேரும், எல்டிசி பதவிக்கு 6,359 பேரும் என மொத்தம் 21,354 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
    புதுச்சேரியைப் பொருத்தவரை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ஏகேடி மெமோரியல் பொறியியல் கல்லூரி மற்றும் ஐஎப்இடி பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறஉள்ளது.
    ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இயக்குநர், மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் வெளிப்படையான முறையில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜிப்மர் நிர்வாகம் செய்துள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டு தேர்வர்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai