Enable Javscript for better performance
திருக்கனூர் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருக்கனூர் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

    By DIN  |   Published on : 10th June 2018 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி சட்டம், ஒழுங்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    அங்கு, குற்ற வழக்குப் பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த காவல் உதவி ஆய்வாளர் வேலுவிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, கூனிச்சப்பட்டில் விபத்தில் இறந்த பெண் காவலர் பூங்குழலியின் வீட்டுக்குச் சென்ற அபூர்வா குப்தா, பூங்குழலியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
    அப்போது, தங்களது மகள் வருவாயில்தான் குடும்பம் நடத்தியதாகவும், மகள் இறந்துவிட்டதால் வருவாய் இன்றி தவித்து வருவதாகவும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தாவிடம் பூங்குழலியின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், தங்களது மகனுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து அரசுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபூர்வா குப்தா தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai